மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

ஆதார் இணைப்பு: அவகாசம் நீட்டிக்கப்படுமா?

 ஆதார் இணைப்பு: அவகாசம் நீட்டிக்கப்படுமா?

வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என செல்லுலார் ஆப்பரேட்டர் சங்கம், இந்திய தனிநபர் அடையாள ஆணையத்திடம் (UIDAI) கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது மொபைல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண்ணை OTP மூலம் ஆதாருடன் இணைக்க டிசம்பர் 1 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து செல்லுலார் ஆப்பரேட்டர் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ராஜன் மேத்யூஸ் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ”ஆதார் - மொபைல் எண் இணைப்புக்கு நாங்கள் இன்னும் தயாராகவில்லை. இந்திய தனிநபர் அடையாள ஆணையம் மற்றும் தொலைத் தொடர்பு ஆணையத்திடம் நாங்கள் கூறியது போலவே இந்தச் சேவைக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், இதை நடைமுறைப்படுத்தத் தொழில்நுட்ப ரீதியாக நிறையச் சவால்கள் உள்ளன. இதனைச் சரிசெய்ய குறைந்தது நான்கு முதல் ஆறு வாரங்கள் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய தனிநபர் அடையாள ஆணையம், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு IVRS அல்லது மொபைல் ஆப் மூலம் ஆதார் எண்ணை இணைக்கும்படி அறிவுறுத்தியிருந்தது. மேலும் ஒரு சில நிறுவனங்கள் அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களுக்குச் சென்று ஆதார் நகலை ஒப்படைக்கும்படி தெரிவித்திருந்தது. மூத்த குடிமக்கள், ஊனமுற்றோரிடம் வீட்டுக்கே சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon