மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

டிசம்பரில் வெளியாகும் பலூன்!

டிசம்பரில் வெளியாகும் பலூன்!

எனக்கு வாய்த்த அடிமைகள் படத்திற்கு பிறகு ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பலூன். இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியுள்ளார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ஜனனி அய்யர், அஞ்சலி நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவும் ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் எந்தவித வெட்டுமின்றிப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். தற்போது படத்தின் அனைத்து பாடல்களையும் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் சினிஷ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் படத்தை டிசம்பர் 29ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ செய்தி இன்னும் வெளியாகவில்லை.

தற்போது தமிழ் சினிமாவின் ட்ரெண்டாகி வரும் திகில் படங்களின் வரிசையில் வெளிவர இருக்கும் பலூன் திரைப்படத்தை 70 எம்எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஆரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை மகேஷ் கோவிந்தராஜ் வெளியிடவுள்ளார். சமீபத்தில், வெளியான இதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் மழை மேகம், ஷட்டப் பண்ணுங்க போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவை படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon