மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

விமானம் டோர் டெலிவரி!

விமானம் டோர் டெலிவரி!

சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்று ஆன்லைனில் விமானத்தையே விற்பனை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மாறிவரும் காலத்திற்கேற்ப அனைவரது வாழ்க்கை முறைகளும் மாறிவருகின்றன. இந்தப் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, காய்கறி முதல் கார் வரை மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஆன்லைனிலேயே வாங்க முடிகிறது.

இந்த வகையில், சீன நிறுவனம் ஒன்று விமானத்தை ஆன்லைனில் விற்றுள்ளது. போயிங் 747எஸ் என்ற அந்தத் தனியார் விமானம் ஆறு ஆண்டுகளுக்கு மேல் விற்பனை செய்யப்படாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து, அந்த விமானத்தை ஆன்லைனில் விற்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் முறையிடப்பட்டது. இதை ஏற்றக்கொண்ட நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்ததையடுத்து, ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா குழுமம் இதை விளம்பரப்படுத்தியது.

இந்த விளம்பரத்தின் பெயரில் எஸ்எஃப் ஏர் கார்கோ என்ற ஏர்லைன் நிறுவனம் 48 மில்லியன் டாலர் செலுத்தி அந்த விமானத்தை வாங்கியுள்ளது. இந்நிலையில் அந்த விமானத்தை டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கியது. அலிபாபா நிறுவனம் அவர்கள் டெலிவரி செய்யச் சொன்ன இடத்தில், மறுநாளே விமானத்தை டெலிவரி செய்துள்ளனர். உலகிலேயே ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் முதல் விமானம் இதுவே.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon