மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

டெங்கு காய்ச்சலை ஒழித்திட நூதன போராட்டம்!

 டெங்கு காய்ச்சலை ஒழித்திட நூதன போராட்டம்!

தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற மர்ம காய்ச்சலால் தினம்தோறும் உயிரிழப்புகள் ஏற்படுவதாகத் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் கூறியுள்ளனர். இதை முன்வைத்து வலையால் மூடிக்கொண்டு நாகர்கோவிலில் நேற்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் என்று பெயர் தெரியாத காய்ச்சலால் தினம்தோறும் ஏராளமான உயிரிழப்புகள் நடைபெறுகிறது. தமிழக அரசின் அலட்சியத்தால் இதுவரை தமிழகத்தில் காய்ச்சலுக்கு 132 பேர் பலியாகி உள்ளனர். 17,000 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சமாளிக்க உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து டெங்கு போன்ற காய்ச்சலை ஒழித்திட தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலைக் கொசுவலைகளால் மூடியபடி நூதனப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

கேரளாவின் அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon