மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

உதயநிதி படத்தில் ஷ்ரத்தா!

உதயநிதி படத்தில் ஷ்ரத்தா!

தமிழில் ரிச்சி படத்தை அடுத்து ஷ்ரதா ஸ்ரீநாத் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் வேதா, இவன் தந்திரன் படங்களை தொடர்ந்து நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படமொன்றில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்துள்ள பேட்டியில்,“இயக்குநர் மித்ரன் ஷ்ரதாவை தன் அடுத்த படத்தில் நடிக்க வைப்பதில் ஆர்வமாக இருக்கிறார். மேலும் இது குறித்து அவரிடம் பேச்சு வார்த்தையும் நடைபெற்றுள்ளது. தற்போது விஷால், சமந்தா நடித்துள்ள இரும்புத்திரை படத்தின் வெளியீட்டிற்கு பிறகே உதயநிதியின் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிவின் பாலி, ஷ்ரதா நடிப்பில் உருவான ரிச்சி டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகிறது. இது தமிழில் ஷ்ரதா நடிப்பில் இந்தாண்டு வெளியாகும் மூன்றாவது திரைப்படமாகும். நடிகரும் இயக்குநருமான ரக்‌ஷித் ஷெட்டியால் எழுதப்பட்ட கன்னட ஹிட் திரைப்படமான உலிதாவரு கண்டன்டே படத்தின் ரீமேக்கான இப்படத்திற்கு அஜனீஷ் லோகநாதன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon