மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

இந்தியாவின் டீசல் பயன்பாடு அதிகரிக்கும்!

 இந்தியாவின் டீசல் பயன்பாடு அதிகரிக்கும்!

வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வருடாந்திர டீசல் பயன்பாடு (நுகர்வு) 150 பில்லியன் லிட்டராக உயரும் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் ஆயில் பயன்பாட்டில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஆயில் பயன்பாட்டில், உள்நாட்டு உற்பத்தி போக இறக்குமதியையே இந்தியா பெருமளவில் நம்பியுள்ளது. எனவே உயிர் எரிபொருட்களை அதிகம் பயன்படுத்தி, இறக்குமதியை 10 சதவிகிதம் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா தனது உள்நாட்டு ஆயில் தேவையில் சுமார் 80 சதவிகிதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்துகொள்கிறது. இந்நிலையில் வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வருடாந்திர ஆயில் பயன்பாடு 150 பில்லியன் லிட்டராக உயரும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி)

தற்போதைய நிலையில் இந்தியாவின் ஆயில் பயன்பாடு 90 பில்லியன் லிட்டர்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கசோலின் ஆயில் பயன்பாடு தற்போதுள்ள 30 பில்லியன் லிட்டரிலிருந்து 2022ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் லிட்டராக உயரும் என்றும் அவர் கூறியுள்ளார். சுற்றுச் சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தும் ’பெட்ரோலியம் கோக்’ நிலக்கரியைத் தவிர்க்கும் விதமாக, பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள் மின் உற்பத்திக்குத் தேவையான இயற்கை எரிவாயு மற்றும் இதர எரிபொருட்களைப் போதுமான அளவில் விநியோகிக்குமாறும் தர்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டுள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon