மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

அன்புச் செழியன் உத்தமர் :சீனு ராமசாமி!

அன்புச் செழியன் உத்தமர் :சீனு ராமசாமி!

பைனான்சியர் அன்புச் செழியன் உத்தமர், நான் நியாயத்தின் பக்கமே இருப்பேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்புச் செழியன் மிரட்டியதன் காரணமாக இணை தயாரிப்பாளர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது. அவரின் உடல் சொந்த ஊரான மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு நேற்று (நவம்பர் 22) நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மதுரையில் நடந்த அசோக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அசோக்குமாரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும், சசிகுமார், சுசீந்திரன், அமீர் உள்ளிட்ட பலர் அன்புச் செழியனுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “எம்.ஜி.ஆர், சிவாஜி, போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்புச் செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே...” என்று பதிவு செய்திருக்கிறார்.

திரையுலகைச் சார்ந்த பலர் அன்புச் செழியனுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இயக்குனர் சீனு ராமசாமியின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon