மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

தமிழகத்திற்கு வரும் கேரள ஆடைக் கழிவுகள்!

 தமிழகத்திற்கு வரும்  கேரள ஆடைக் கழிவுகள்!

கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்டு தேனி மாவட்டம் சரத்துப்பட்டியில் கொட்டப்பட்ட அய்யப்ப பக்தர்களின் ஆடைக் கழிவுகளை வருவா‌ய்த் துறையினர் அம்மாநிலத்திற்கே திருப்பி அனுப்பினர்.

மண்டல பூஜை தொடங்கியுள்ள நிலையில் அய்யப்ப தரிசனம் செய்யத் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில பக்தர்கள் சபரி மலைக்குச் சென்றுவருகின்றனர்.

இந்நிலையில் அய்யப்ப பக்தர்கள் தொடர்ந்து தங்களது ஆடைகளைப் பம்பை நதியில் விட்டு வருகின்றனர். இவ்வாறு விடப்படும் ஆடைகளை அப்புறப்படுத்தும் பணியைத் தனியார் நிறுவனம் ஒன்று செய்துவருகிறது.

இவ்வாறு விடப்படும் ஆடைகளை மறுசுழற்சி செய்ய கேரளாவில் தடை உள்ளதால் அவை அனுமதியின்றி தேனி மாவட்டம் சரத்துப்பட்டி கொண்டுவரப்பட்டு உலர்த்தித் தரம் பிரிக்கப்படுகின்றன.

இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, தொற்று நோய் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் பலமுறை குற்றம்சாட்டிவருகின்றனர்.

இது குறித்துத் தகவலறிந்த வருவா‌ய்த் துறையினர் துணி கொட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். அங்கு கொட்டுவதற்காக வந்த வாகனத்தையும், ஏற்கனவே அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவுகளையும் மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பினர்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon