மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

அரசியல் களத்தில் இறங்குவது எப்போது?

அரசியல் களத்தில் இறங்குவது எப்போது?

நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், கடந்த மே மாதம் ரசிகர்களை அவர் சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை எனவும் போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம் என்றும் அதற்கான பணிகளை அவர் தொடங்கிவிட்டார், தனது பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி இதுகுறித்து முறையாக அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று காந்தி மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியனும் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்த நடிகர் கமல், களத்தில் இறங்கிச் செயல்பட தொடங்கியுள்ளார்.

எனவே, ரஜினி அரசியலுக்கு வருவது எப்போது என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் வலுப்பெற்று வந்தது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, “அரசியல் களத்தில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை. எனது பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதிக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்க உள்ளேன். காலா படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது” என்று தெரிவித்தார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon