மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

முதன்முறையாக அஜித் - விஜய் ரசிகர்களின் சண்டை!

முதன்முறையாக அஜித் - விஜய் ரசிகர்களின் சண்டை!

பாகவதர் - சின்னப்பா, எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என உச்ச நட்சத்திர ரசிகர்களின் படங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது அஜித் - விஜய் ரசிகர்களை மையமாகக்கொண்டு உருவாகிவரும் ‘விசிறி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் நடிகராகவும் கவனிக்கப்பட்ட ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிப்பில் வெளியான ‘எங்கிட்ட மோதாதே’ திரைப்படம் ரஜினி மற்றும் கமல் படங்களுக்குக் கட் அவுட் மற்றும் பேனர் வரையும் இரண்டு நாயகர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளிவந்தது. தற்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு விசிறி திரைப்படம் உருவாகி வருகிறது.

வெற்றி மகாலிங்கம் இயக்கிவரும் இந்தப் படத்தில் அஜித் - விஜய் ரசிகர்களாக ராம் சரவணா மற்றும் ராஜ் சூர்யா நடித்திருக்கிறார்கள். ரெமோனா நாயகியாக நடித்திருக்கிறார். அஜித் - விஜய் ரசிகர்களாக நடித்திருக்கும் அவ்விருவர்களுக்கிடையே ஏற்படும் மோதலையும், அவர்களின் காதல் உள்ளிட்ட பலவற்றை சொல்லும் விதமாக இந்தப் படம் இருக்குமென ட்ரெய்லரை பார்க்கையில் தெரிகிறது.

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளதைத் தொடர்ந்து, படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசிறி ட்ரெய்லர்

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon