மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

விடைத்தாள்களைத் திருத்த 1,169 பேராசிரியர்களுக்குத் தடை!

விடைத்தாள்களைத் திருத்த 1,169 பேராசிரியர்களுக்குத் தடை!

பொறியியல் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளில் ஈடுபட 1,169 பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நேற்று (நவம்பர் 22) தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணியைப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் பேராசிரியர்கள் செய்கின்றனர். தேர்வு முடிவுகளில் தங்களுக்குக் கிடைத்த கிரேடுகளில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு மறுமதிப்பீடு செய்யும்போது, மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டால், விடைத்தாளைத் திருத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், பொறியியல் தேர்வு விடைத்தாள்களைத் திருத்துவதில் பேராசிரியர்கள் மெத்தனம் காட்டுவதாக மறுமதிப்பீட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. அப்படி அடையாளம் காணப்பட்ட 1,169 பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்த அண்ணா பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon