மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

நடிப்பில் முத்திரை பதிப்பாரா கௌதம்?

நடிப்பில் முத்திரை பதிப்பாரா கௌதம்?

இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் மேனன் நடிகராகவும் தன்னை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தனது படங்களில் சில கதாபாத்திரங்களுக்குக் குரல்கொடுத்தும் ஒன்றிரண்டு காட்சிகளில் தோன்றியும் வந்த கௌதம், தீவிரம் படத்தில் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். மைக்கேல் முத்து இயக்கும் இந்தப் படத்தில் கோகுல் காந்த், அம்ஷத் கான் இணைந்து நடிக்கின்றனர். சமீர் பரத்ராம் தயாரிக்கிறார்.

படம் குறித்தும் கௌதமின் கதாபாத்திரம் குறித்தும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய சமீர், “புலனாய்வுத் துறை அதிகாரியாக நடிக்கும் கெளதமின் கதாபாத்திரம் க்ளைமாக்ஸில்தான் வரும் என்றாலும் முக்கியமான கதாபாத்திரமாகும். அவரது உதவியாளராக நானும் நடித்துள்ளேன். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. கதாபாத்திரத்தைக் கச்சிதமாக கையாண்டுள்ள அவர் ஒரே டேக்கில் நடித்து அசத்தினார். இது சிறிய படம் என்றாலும் எங்களுக்கு உதவும் பொருட்டு கௌதம் இதில் நடித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

“தீவிரவாதச் சிந்தனைகளால் இளைஞர்கள் எவ்வாறு மூளைச் சலவை செய்யப்பட்டு மனித வெடிகுண்டாக மாறுகின்றனர் என்பதை படம் பேசுகிறது. இரு நண்பர்களுக்கு இடையேயான டிராமாவாக தான் படம் தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் இந்த கதை உலகளவில் பொருந்திப் போவதாக இருக்கும்” என்றும் சமீர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon