மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

ஜனாதிபதி மாளிகையை மக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி!

ஜனாதிபதி மாளிகையை மக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி!

ஜனாதிபதி மாளிகையைப் பொதுமக்கள் சுற்றிப்பார்க்க வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாள்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி ரைஸனா ஹில் பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. இது பிரமாண்ட தோட்டம் 300க்கும் மேற்பட்ட அறைகள் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது.

இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஒவ்வொரு வாரத்தின் வியாழன் முதல் ஞாயிறு வரை ஜனாதிபதி மாளிகையின் மூன்று சர்க்கியூட் பகுதிகளைச் சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எட்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நான்கு நாள்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாட்டு குடிமக்கள் அசல் பாஸ்போர்ட்டும், இந்திய குடிமக்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். ஜனாதிபதி மாளிகையின் இணையதளத்தில் இதற்கான முன்பதிவு செய்திருக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon