மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

ஸ்கர்ட்டுக்கு சண்டையா?: தப்சி தத்துவங்கள்!

ஸ்கர்ட்டுக்கு சண்டையா?: தப்சி தத்துவங்கள்!

‘பண்டைய இந்தியாவில் பயன்படுத்தப்படாத எதுவுமே இந்திய மக்களின் கலாசாரம் இல்லை. அவற்றை நாமும் பயன்படுத்தக் கூடாது’ என்று பெண்களின் உடையைக் கலாசார சீர்கேடாக சொல்கிறவர்களிடம், ‘இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் இந்திய கலாசாரம் இல்லையே?’ என்ற கேள்வியுடன் இந்த செய்தியைத் தொடங்குவது சிறப்பானது.

தப்சி சொன்ன கருத்துக்கும், அதை அலங்கரித்த உடைக்கும் தொடர்பே இல்லாமல் ட்விட்டரில் வம்பிழுத்த தனது ஃபாலோயருக்கு அவர் கொடுத்த பதிலடி தற்போது பல ஆயிரம் ரீ-ட்வீட்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

தப்சி என்ன சொன்னார்?

மேலே இருக்கும் போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்த தப்சி சமயத்தில் சில பகுதிகள் தொடாமலும், மாற்றப்படாமலும், பயன்படுத்தப்படாமலும் இருந்து விடுகின்றன என்று தலைப்பு வைத்திருந்தார். அந்த போட்டோவில் கமெண்ட் செய்த தப்சியின் ஃபாலோயர் ஒருவர் “இந்த மாதிரி உடையணிந்து ஆண்களை மயக்குவதால்தான் அவர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள்” என்று கூறினார். இதற்குப் பதிலளித்த தப்சி அந்த மாதிரி ஆண்கள் தங்களது நோயைக் குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். சீக்கிரம் நலம் பெறுங்கள் என்று பதிலடி கொடுத்தார். இது சாம்பிள்தான். இதேபோல பல கமெண்ட்கள் கலாசாரத்தைச் சீரழிப்பதாகவும், வேண்டுமென்றே இப்படி போட்டோக்கள் போடுவதாகவும் பதிவாகியிருக்கின்றன.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon