மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

இரு நாயகிகளுடன் அதர்வா

இரு நாயகிகளுடன் அதர்வா

அதர்வாவுக்கு ஜோடியாக அனைக்கா ஷோதி, சக்ர போதி ஆகியோர் நடித்திருக்கும் ‘செம போத ஆகாத’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

“போதையில தலை தெறிக்க சுத்துனவன பாத்திருப்பீங்க... போதை தெளிஞ்சு சுத்துறவன பாத்திருப்பீங்களா..” என்கிற வசனத்தின் மூலம் போதையில் இல்லாத ஓர் இளைஞனும் எத்தகைய பிரச்னைகளைச் சந்திக்கிறான் என்பதை விவரிக்கும் படமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ‘மதுரைக்காரனுக்குப் பயமா’ என்று கேட்கிற கருணாகரனிடம் ‘பயமெல்லாம் இல்ல... ஒரே குழப்பமா இருக்கு’ என்று அதர்வா சொல்லும் பதிலில் ஒரு குழப்ப மனநிலையில் சுற்றும் கேரக்டரில் அதர்வா நடித்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. குழப்பமான மனநிலையில் இருக்கும் ஒருவன் எதிர்கொள்கிற பிரச்னையைக் காதல், ஆக்ஷன் கலந்து படத்தை உருவாகியிருக்கிறார்கள் என ட்ரெய்லரை பார்க்கையில் தெரிகிறது.

பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை அதர்வா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிக் அஸ் என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் தந்த வரவேற்பை அடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு நாயகிகளுடன் களமிறங்கிய `ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ திரைப்படம் அதர்வாவுக்குக் கைகொடுக்காத நிலையில், இரண்டு நாயகிகளுடன் களமிறங்கியிருக்கும் செம போத ஆகாதே திரைப்படம் கைகொடுக்குமா என்பதை விரைவில் எதிர்பார்க்கலாம்.

செம போத ஆகாதே ட்ரெய்லர்

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon