மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

ஆட்சியரிடம் மனு கொடுத்த இரண்டாம் வகுப்பு மாணவர்கள்!

ஆட்சியரிடம் மனு கொடுத்த இரண்டாம் வகுப்பு மாணவர்கள்!

தேனியில் இரண்டாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 22) ஆட்சியரைப் பார்க்க சுமார் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் வந்திருந்தனர். வனத்துறை ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மஞ்சனூத்து கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியைச் சேர்ந்தவர்கள் அந்தக் குழந்தைகள். தங்களுக்கு ஆசிரியர்கள் வேண்டும் என்று கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்பு தங்களது பாடப் புத்தகத்தில் உள்ள பாடல்களை ஆட்சியர் முன்பு பாடிக்காட்டினர்.

இதைக்கண்ட மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் பாடம் நடத்துவதால் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon