மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

இசைப்புயல் வெளியிட்ட இசை மேதையின் ஆல்பம்!

இசைப்புயல் வெளியிட்ட இசை மேதையின் ஆல்பம்!

மறைந்த பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவின் ‘அமல்கம்’ இசை ஆல்பத்தை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.

கர்நாடக சங்கீதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. பத்மவிபூஷண், செவாலியர் உட்பட பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் வென்றவராகிய பாலமுரளி கிருஷ்ணா உருவாக்கிய 'அமல்கம்' என்ற ஃபியூஷன் இசை ஆல்பத்தை வெளியிட்டார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். நவீன, சமகால இசை பாணியில் அவரே இசையமைத்துப் பாடிய இந்த ஆல்பத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளன. அவற்றை சரிகம நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

வக்கேயகரா அவர்கள் கடைசியாக ரெக்கார்டு செய்த ஆல்பமாகவும் அமைந்துள்ளது. இதற்கு ஷ்யாம் ரவி ஷங்கர், நிகில் ஆகியோர் இணைந்து பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை கவனித்துள்ளனர்.

அமல்கம் இசையின் பலவித பரிணாமங்களையும் இணைத்து, இந்திய பாரம்பர்ய இசையின் கூறுகளைக் கொண்டும், ஜாஸ், புளூஸ், மேற்கத்திய இசையின் ஆர்க்கெஸ்ட்ரல் ராக், சமகால ஃபியூஷன், பாலமுரளி கிருஷ்ணாவால் உருவாக்கப்பட்ட ராகங்கள், இந்திய இசைக்கருவிகளான மிருதங்கம் ஆகியவற்றோடு மேற்கத்திய இசைக்கருவியான சாக்ஸஃபோன் மூலம் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

பாலமுரளி கிருஷ்ணா டிரஸ்ட் சார்பில் விபு பாலமுரளி, இசைக்கலைஞர் கிருஷ்ணகுமார், சரிகம நிறுவனத்தின் சார்பில் ஆனந்த் ஆகியோர் இந்த ஆல்பம் வெளியீட்டின்போது உடனிருந்தனர்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon