மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

நிலக்கரியால் மாசுபாடு: அரசு நடவடிக்கை!

நிலக்கரியால் மாசுபாடு: அரசு நடவடிக்கை!

திறந்த நிலையில் நிலக்கரியை டிரக் மற்றும் சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்வதால் மாசுபாடு அதிகரிப்பதாக எழும் புகார்களை அடுத்து மூடிய நிலையில் நிலக்கரியை எடுத்துச் செல்லும் திட்டத்தை மத்திய அரசு கையிலெடுத்துள்ளது.

நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் சுரங்கங்களிலிருந்து சரக்கு ரயில் மூலமாகவோ அல்லது டிரக் மூலமாகவோ மின் உற்பத்தி ஆலைகளுக்கு விநியோகிக்க எடுத்துச் செல்லும்போது அவை காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் துறைமுகங்களிலிருந்து எடுத்துச் செல்லும் வழித்தடங்களிலும் மாசுபாடு ஏற்படுகிறது. குறிப்பாக இந்தியத் தலைநகரான டெல்லியில் நச்சுப் புகை மண்டலமே இதனால் உருவாகியுள்ளது. இது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால் அரசு இதில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

இதுபற்றி மத்திய ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “நிலக்கரியை சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எடுத்துச் செல்லும் சிறந்த வழிமுறைகளை நாங்கள் தேடி வருகிறோம். அனைத்து டிரக் மற்றும் ரயில் பெட்டிகள் பாதுகாப்பாக மூடப்பட்டு நிலக்கரியை எடுத்துச் செல்வதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். சல்பர் டையாக்சைடை வெளியேற்றும் உபகரணத்தைப் பயன்படுத்தும்போது மாசுபாட்டுக் காரணிகள் குறையும். ஆனால், அவற்றை அமைப்பதற்கு மின் உற்பத்தி நிறுவனங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படும்” என்று கூறியுள்ளார்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon