மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

பியூட்டி ப்ரியா – முகம் பொலிவாக திராட்சை மசாஜ்!

பியூட்டி ப்ரியா – முகம் பொலிவாக திராட்சை மசாஜ்!

வெகு நாள்கள் கழித்து வீட்டுக்கு வந்த தங்கை, கிலோ கணக்கில் திராட்சைகளை வாங்கி வந்திருந்தாள். திடீர் பாசத்தின் காரணத்தை நேரடியாகக் கேட்க முடியாமல் நானும் காரணம் தானாக வெளிப்படும் என்று காத்திருந்தேன் கடிகார முட்களுடன், காமெடி சீன்களும் நகர்ந்தது. சுமார் 11 மணி வாக்கில் சீரியல்கள் சீன்கள் கண்களில் பட ஆரம்பித்தாள். “அக்கா இந்த சீரியல்ல வர்றவங்கல்லாம் எவ்ளோ அழகா இருக்காங்கல்ல...” என ஆரம்பித்தவள், அவளையே அறியாமல் திராட்சை ஜூஸ், திராட்சை மசாஜ், புலாவ், திராட்சை பேசியல் என ஏகபோகத்துக்கும் வாரி இறைத்தாள். அவற்றில் சில,

“சீரியலில் வரும் அழகிகளைப்போன்ற அழகு மிளிர்ந்த தோற்றத்தைப் பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையைத் தூக்கிப் போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்துக்குப் பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது.

இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து ரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும் சுத்தமாகவும் மாற்றுகின்றது.

ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ள இப்பழச்சாற்றின் மூலம் சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் கூடிய சரும பாதிப்புகள் மற்றும் கதிர்களிடமிருந்தும் வெப்பத்தினால் வரும் கட்டியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

திராட்சை சாறு இயற்கையாவே சருமப் பிரச்னைகளை வர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. பொதுவாக வெயில் காலத்தில் தினமும் ஒரு டம்ளர் திராட்சை சாறு அருந்துவது சிறந்தது. திராட்சை பழச்சாறு இறந்த தோலை நீக்குவதில் உதவக் கூடியதாகும். இதை நீங்கள் சருமத்தில் போட்டால் போதும். உடனடியாக தோல் உரிய ஆரம்பித்து விடும். இவை இறந்த திசுக்களை நீக்கி சுருக்கங்கள் அற்று இயற்கையாகக் காணப்படும்.

நல்ல ரத்த ஓட்டத்தின் காரணமாக சருமத்தின் நீட்சித்தன்மையையும் திராட்சை அதிகரிக்கிறது. நீர் பதத்தைச் சருமத்துக்குக் கொடுக்கும்போது திராட்சை சாறு ஈரப்பதத்தை சருமத்துக்கு இயற்கையாக அளிக்கிறது” என்று கூறி முடித்து... “அக்கா பேசிப்பேசி தாகமா இருக்கு கொஞ்சம் ஜூஸ் கிடைக்குமா.. அப்படியே இந்த திராட்சையிலேயே ஒரு ஜூஸ் போடுங்களேன்” என்றபோதுதான் திடீர் அபரிமிதமான அக்கா பாசம் புரிந்தது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon