மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

பயனர்களைக் கண்காணிக்கும் கூகுள் நிறுவனம்!

பயனர்களைக் கண்காணிக்கும் கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனத்தின் லொக்கேஷன் வசதியைப் பயன்படுத்தி ஒரு பயனரின் இடத்தை அறிந்திட முடியும். ஆனால், இந்த வருடம் (2017) தொடக்கத்தில் வெளியான புதிய அப்டேட்டில் பயனர்களின் லொக்கேஷன் வசதி ஆன் செய்யப்படாமல் இருந்தாலும் பயனர்களின் இடத்தை மிகச் சரியாக கூகுள் நிறுவனம் கண்காணித்து வருகிறது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட தகவலில் பயனர்களின் துல்லியமான இடத்தை அறிந்து அவர்களுக்கு மிக அருகிலுள்ள டவர்கள் மூலம் மிகவும் விரைவாக தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இந்த வசதியைப் பயன்படுத்தினோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு செல் ஐடி என்ற ஒன்றைப் பயன்படுத்தி வந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

லொக்கேஷன் என்ற ஒன்றை ஆன் செய்யாதபோதும் கூகுள் நிறுவனம் இதுபோன்று பயனர்களைக் கண்காணிப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியானதால், இந்த மாத இறுதிக்குள் இந்த வசதியை நீக்கம் செய்வதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வசதி மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒரு நபர் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும்போது அதன் அருகில் உள்ள டவர்கள் மூலம் கனெக்ட் செய்யப்பட்டு பயனர்களின் இடம் அறியப்படுகிறது.

இந்த புதுமையான வசதி தற்போதுள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள் லொக்கேஷன் என்ற ஆப்ஷனில் ஹிஸ்ட்ரியில் பயனர்கள் சென்ற இடங்கள் பதிவாகி விடுகின்றன. இதனால் சில நன்மைகள் இருந்தாலும், சில சிக்கல்கள் இருப்பதால் இதை இந்த மாத இறுதியில் நீக்கம் செய்கிறது கூகுள் நிறுவனம்.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon