மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

யோகாவில் கின்னஸ் சாதனை: மைசூருவுக்கு அங்கீகாரம்!

யோகாவில் கின்னஸ் சாதனை: மைசூருவுக்கு அங்கீகாரம்!

யோகா என்பது இந்தியாவின் 5,000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு. யோகா என்பதை பலர், உடல் வளைதல், திரும்புதல், நீட்டுதல், மூச்சினை எடுத்து விடுதல் எனச் சிக்கலான உடற்பயிற்சி என்று நினைக்கக்கூடும். இவையனைத்தும் உள்ளிருக்கும் மனித மனதின் ஆன்மாவின் எல்லையற்ற சக்தியைத் திறந்து திறனை அதிகரிக்கும் ஆழமான அறிவியலைப் பற்றிய மேலோட்டமான கருத்துகள் ஆகும். எனவேதான் அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஜூன் 21இல், கர்நாடகா மாநிலம் மைசூர் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் கூட்டு யோகா நிகழ்ச்சி நடத்தியது. இதில், 55 ஆயிரத்து 506 பேர் பங்கேற்று, யோகா செய்தனர். ஆனால், 54 ஆயிரத்து 101 பேர் பங்கேற்றதாக மாவட்ட நிர்வாகம் தவறாகக் கணக்கிட்டிருந்தது. அதே நாளில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 54 ஆயிரத்து 522 பேர் பங்கேற்றதால் கின்னஸ் சாதனையை அவர்கள் தங்களுடையதாக்கினர்.

கின்னஸ் அமைப்பின் பிரதிநிதிகள் மைசூருவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பற்றி சரியாகக் கணக்கிட்டு மைசூருவுக்கு சாதனை பட்டத்தைக் கொடுத்துள்ளனர். மைசூருவில் நடந்த யோகா நிகழ்ச்சியில், 55 ஆயிரத்து 506 பேர் பங்கேற்றதன் மூலம், உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக கின்னஸ் அமைப்பு தன் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன், டெல்லியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் 35 ஆயிரத்து 985 பேர் பங்கேற்றதே சாதனையாக இருந்தது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon