மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

த்ரில் வெற்றி பெற்ற டெல்லி!

த்ரில் வெற்றி பெற்ற டெல்லி!

இந்தியன் சூப்பர் லீக்கின் நான்காவது சீசன் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. கடந்த சீசன் வரை 8 அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகள் தற்போது 10 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகின்றன.

அதன்படி நேற்று நடைபெற்ற (நவம்பர் 22) ஐந்தாவது லீக் ஆட்டத்தில் புனே மற்றும் டெல்லி அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சரிசமமாக விளையாடத் தொடங்கினர். முதல் பாதியில் இரு அணிகளும் சமமாக விளையாடியதால் கோல் அடிக்க முடியாமல் வீரர்கள் தவித்தனர்.

பின்னர் இரண்டாம் பாதி தொடங்கிய ஒரு நிமிடத்தில் முதல் கோலினை டெல்லி வீரர் பவுளின்ஹோ டைஸ் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். போட்டியின் 54ஆவது நிமிடத்தில் டெல்லி வீரர் சான்கடே மற்றொரு கோல் அடித்து புனே அணிக்கு மேலும் அதிக சவாலைக் கொடுத்தனர். 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த டெல்லி அணிக்கு மேலும் கூடுதல் பலமாக போட்டியின் 65ஆவது நிமிடத்தில் மேதிஸ் மிரபாஜி மேலும் ஒரு கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மூன்று கோல்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிக்கொண்டிருந்த புனே அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் எமிலியானோ அல்பாரோ முதல் கோலினை 67ஆவது நிமிடத்தில் அடித்தார். அதன்பின்னர் புனே அணி வீரர்கள் பல்வேறு கோல் முயற்சிகளை மேற்கொண்டாலும் சிறப்பாக அதைத் தடுத்து டெல்லி வீரர்கள் விளையாடினர். போட்டி முடிவதற்கு முன்னர் வழங்கப்படும் கூடுதல் நேரத்தில் புனே அணி வீரர் மார்கோஸ் ஒரு கோல் அடித்தார். எனவே 3-2 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் இறுதி நிமிடம் வரை மிகுந்த சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாக இருந்தது.

வியாழன், 23 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon