மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: ருசியை உணர்த்திய பாரம்பரியம் உணவகம்

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: ருசியை உணர்த்திய பாரம்பரியம் உணவகம்

விளம்பரம்

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’ பிராப்பர்ட்டீஸ் டெவல்ப்பர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் உருவாக்கியிருந்த பல வில்லாக்கள், அப்பார்ட்மென்ட் பகுதிகளுக்கு நடுவில் அமைந்திருந்தது, நாங்கள் நுழைந்த பாரம்பரியம் உணவகம்.

வடவள்ளி பகுதியில் தொண்டாமுத்தூர் நெடுஞ்சாலையில் நாங்கள் இதற்கு முன்பு பார்த்து அனுபவித்து உணர்ந்த கம்பீரமான சன்ஸ்ரே வளாகத்தின் பின்னணியில், மிக பவ்யமாகக் காட்சியளித்தது பாரம்பரியம் உணவகம்.

உள்ளே நுழையும்போது எனக்குள் மறைந்திருந்த பாட்டியின் சில உணவு வகைகள் மீண்டும் நினைவுக்கு வந்தது. நான் என்ன நினைத்து உணவகத்துக்குள்ளிருந்த மேஜையில் அமர்ந்து மெனு கார்டை எடுத்துப் பார்த்தேனோ அந்த உணவு வகைகள் அனைத்தும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது ஆச்சர்யம்தான்.

“சூப்பர்” என்றேன்.

“என்ன வேண்டுமென்று ஆர்டர் பண்ணுங்க சார். காரம் தூக்கலாகவா, உப்பு குறைவாகவா... நீங்க எப்படி சாப்பிடணும்னு விரும்பறீங்களோ அப்படியே சொல்லுங்க. அதுக்கேக்க மாதிரி சமைச்சு தர சொல்றேன்” என்றார் ஆர்டர் எடுக்க வந்தவர்.

என் சம்பந்தியும், மருமகளும் மகனும் மெனு பட்டியல் மொத்தத்தையும் மேய்ந்து கொண்டிருந்தார்கள். வட இந்திய உணவுகளைச் சம்பந்தியும் மருமகளும் ஆர்டர் செய்ய, மகன் இரண்டும் கலந்த தந்தூரி அயிட்டங்களை ஆர்டர் செய்தான். என் பார்வை தென்னிந்திய உணவுகளையே சுற்றிக்கொண்டிருந்தது. அதில் எதைச் சொல்வது, எதை விடுவது என்பதில்தான் குழப்பம்.

“மீல்ஸ் கூட இருக்கு சார்” என்றார் ஆர்டர் எடுத்தவர்.

ஒருவழியாக முடிவுக்கு வந்து சொன்னேன்.

உணவு வரும்வரை உணவகத்தை நோட்டமிட்டேன். மெனு கார்டில் இருந்த பாரம்பரிய உணவு வகைகள் மட்டுமல்ல; உணவகமே பாரம்பரிய முறையில்தான் அமைக்கப்பட்டிருந்தது. பரந்த ஹால். ஓரிடத்தில் நின்று பார்த்தால் உட்கார்ந்திருந்தவர்கள் அனைவரையும் பார்க்கும் வசதி. உட்கார்ந்திருந்திருந்த இடத்தில் இருந்தபடியே கையை உயர்த்தினால் ஓடி வந்து ‘என்ன வேண்டும்?’ என்று கேட்கும் வெயிட்டர்கள்.

“என்ன சார்... இத்தனை விஷயங்கள் இருக்கு. எதுவுமே வேண்டாம்னு தென்னிந்தியச் சாப்பாட்டை சொல்லியிருக்கீங்க?” என்றார் உணவக நிர்வாகி.

உண்மையைச் சொன்னேன். “காலையிலே இருந்து இதுவரைக்கும் நாங்க ஶ்ரீ தக்‌ஷா ல பார்த்த ஒவ்வொரு விஷயங்களும் மனசுக்குள்ளே ஓடிட்டு இருக்கு. அதுவே மனசுக்கு திருப்தியாயிருக்கு. அடுத்த என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன். எங்கே போயிடப் போறோம்? இன்னும் கொஞ்ச நாள்ல கோவைக்குத்தானே வரப் போறோம். அப்ப அனுபவிச்சு ருசிச்சுச் சாப்பிடறேன்” என்றேன்.

நாங்கள் சொன்ன உணவு வகைகள் மேஜைக்கு வந்து விட்டன. நான் சாப்பிட்ட சவுத் இந்தியன் மீல்ஸே அபாரம் என்றால், என் சம்பந்தியும் மகனும் மருமகளும் சாப்பிட்ட வகைகள் அட்டகாசம் என்பதை அவர்கள் முகத்திலேயே உணர்ந்தேன். அவர்கள் உணவை ரசித்து, ருசித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வெளியே வர நேரமாகலாம்.

சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தேன். உணவகத்துக்கு முன் பரந்து விரிந்திருந்த இடத்தில் ஆங்காங்கு கலை வேலைப்பாடு அமைந்த சிற்பங்கள், பழைய விஷயங்களை நினைவுபடுத்தும் பொருள்கள் பாரம்பரியத்தைப் பறைசாற்றின.

கூரை வேய்ந்த ஓரிடத்தில் சற்று நேரம் அமர நினைத்தபோது என் அருகில் வந்தார் ஶ்ரீ தக்‌ஷா நிர்வாகி.

“உட்காருங்க சார். வேற ஏதாவது சாப்பிடறீங்களா?” என்றார்.

“இப்போ சாப்பிட்டதே பாரம்பர்யமான ருசியை உணர்த்திவிட்டது" என்ற நான் என்னைச் சுற்றிலும் படர்ந்திருந்த இடத்தைப் பார்த்துக் கேட்டேன்.

“இவ்வளவு இடத்தை எதுக்கு விட்டு வெச்சிருக்கீங்க?” என்றேன்.

“ஈவினிங் டயத்துலே இங்கேயும் டேபிள் போட்டு சர்வ் பண்ணுவாங்க. இந்த இடத்தைப் பொறுத்தவரை நிறைய பார்ட்டிகள், பங்க்‌ஷன்ஸ் நடக்கும். அப்போது இந்த இடத்தைப் பயன்படுத்திக்குவாங்க.”

“இயற்கை சூழல்ல புல்வெளியிலே வானத்தைப் பார்த்தபடி உணவருந்துறதும் சுகம்தான்” என்றேன்.

“உண்மைதான் சார். இந்த இடம் ஶ்ரீ தக்‌ஷா குடியிருப்புகளுக்கு நடுவில் அமைதியான சூழல்ல அமைந்திருப்பதால் அடிக்கடி ஏதாவது விசேஷங்கள் நடந்துகொண்டேயிருக்கும். ஶ்ரீ தக்‌ஷா குடியிருப்புவாசிகள் மட்டுமல்லாமல், வெளியாட்களும் நிறைய பேர் இங்கே பரிமாறப்படும் உணவுக்காகவும், சேவைக்காகவும் விரும்பி வந்து விசேஷங்களை நடத்துறாங்க. இன்னிக்கு ஈவினிங்கூட ஒரு பங்க்‌ஷன் இருக்கு. முக்கியமா இந்த பகுதியைச் சுற்றியிருக்கும் ஶ்ரீ தக்‌ஷா குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வெளியிடங்களில் சாப்பிட நினைத்தாலோ, தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை வெளியிடங்களில் சாப்பிட அழைத்துப் போக நினைத்தாலோ இங்கே வந்துடறதுக்கு வசதியாயிருக்குனு சொல்றாங்க சார்” என்றார்.

நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் ஶ்ரீ தக்‌ஷா வின் பாரம்பரியம் உணவகத்துக்குள் நுழைந்தது. அவர்களை நான் உற்றுநோக்குவதை உணர்ந்த ஶ்ரீ தக்‌ஷா நிர்வாகி சொன்னார்.

“ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன். அதை இப்ப நீங்க பார்த்துட்டிருந்தவங்க நினைவுபடுத்திட்டாங்க. வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகத்துக்குச் செல்பவர்கள் இந்த தொண்டாமுத்தூர் நெடுஞ்சாலையைத்தான் அதிகம் பயன்படுத்துவாங்க. அவங்களும் இந்த பாரம்பரியம் உணவைத் தேடி வருவாங்க” என்றார்.

அதேநேரம் என் சம்பந்தி இடுப்பு பெல்ட்டை சரி செய்தபடி பாரம்பரியம் உணவக ஹாலை விட்டு வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து வந்த என் மகன்... “அடுத்து எங்கப்பா போகணும்?” என்றான்.

பயணம் தொடரும்...

விளம்பர பகுதி

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon