மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

இந்திரஜித்: வில்லன்கள் இல்லை, ஹீரோக்கள்!

 இந்திரஜித்: வில்லன்கள் இல்லை, ஹீரோக்கள்!

விளம்பரம்

‘தலைல தொப்பி, வாய்ல சுருட்டு, கைல சவுக்கு ஐ லவ் இண்டியானா ஜோன்ஸ்’ இந்த டயலாக் கௌதம் கார்த்திக் பேசும்போது, ரொம்பவும் சாதாரணமா ‘பட் ஐயம் நாட் ஹேரிசன் ஃபோர்டு’ என சொல்வது தான் படம் முழுக்க என் மேனரிசமா இருக்கும். எஸ், நான் தான் உங்க சுதன்ஷு பாண்டே பேசுறேன். என்னுடன் இருப்பது இன்னொரு வில்லன் ராஜ்வீர் சிங். நான் பேசுறது சாதாரண எழுத்துலயும், ராஜ்வீர் பேசுறது

போல்டு

எழுத்துலயும் தெரியும்.

மிகவும் ஸ்டைலான வில்லன்களை ரசிக்கத் தொடங்கியிருக்க தமிழ் சினிமாவுக்கு இந்திரஜித் படம் மூலமா இரண்டு வில்லன்கள் கிடைச்சிருக்கிறோம். நான் ஏற்கனவே இரண்டு தமிழ் படத்துல நடித்திருந்தாலும், படம் முழுக்க தொடர்ந்துவரும் வில்லனா இந்திரஜித்தில் இருப்பேன். என்னை மாதிரியே பாலிவுட்டிலிருந்து வந்திருக்கும் ராஜ்வீர் சிங்கும் இருக்கிறார். ராஜ்வீர் சிங் இந்தப்படத்தில் நடிக்க கமிட் ஆனது மிக முக்கியமானது. அதை அவரே சொல்லட்டும்.

பல வருஷத்துக்கு முன்பு மும்பையில் கலைப்புலி தாணு அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் அவரை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். இவர் கொஞ்சமா சொல்றார். நான் விளக்கமா சொல்றேன். 4 வருஷமா இதையே தான் கேட்டுக்கிட்டு இருக்கேன். ஒரு இளைஞர் தாணு அவர்களை சந்திக்கிறார். ஆஜானுபாகுவான தோற்றம்கொண்ட அவர் யாரென விசாரிக்கும்போது, இந்தியில் சில படங்களில் நடித்து புகழ்பெற்றிருக்கிறார் அவர். தமிழில் நடிப்பதற்கும் தயார் என சொன்னவரை, நினைவில் வைத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு தாணு சென்னை வந்துவிடுகிறார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு ‘ஒரு படத்துல நடிக்கணும். ஆடிஷனுக்கு சென்னை வரமுடியுமா?’ என்று கலாபிரபுவின் குரல் ஃபோனில் ஒலிக்கிறது. நேரில் வந்து கதையைக் கேட்டு, ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்ததும் அந்த இயக்குநர், அன்று பேசிய தாணுவின் மகன் என்று தெரிந்துகொள்கிறார். அவர்தான் ராஜ்வீர் சிங்.

இந்திரஜித்தில் வில்லனாக நடித்திருப்பவர்கள் நாங்கள் இருவர் மட்டுமில்லை. மாற்றான் படத்தின்மூலம் தமிழுக்கு வில்லனாக அறிமுகமான சச்சின் கெடேகரும் கிட்டத்தட்ட ஒரு வில்லன் தான். ஆனால், அவர் எப்படி வில்லனாகிறார் என்ற சுவாரசியம் தியேட்டரில் படம் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியவரும்.

நான், ராஜ்வீர் ஆகிய இருவரும்கூட திரைப்படத்தின் வில்லன்களா என்றால், இல்லை. இருவருக்குமான நியாயம் சொல்லப்பட்டிருக்கிறது. அதை ராஜ்வீர் சொல்லட்டும். என் கேரக்டர் கிட்டத்தட்ட ஒரு போராளியைப் போன்றது. என் மண்ணில் இருக்கும் வரலாற்றுப் புதையலை எடுத்துக்கொள்ள வரும் இருவர் தான் சுதன்ஷுவும், கௌதமும். என் கேரக்டரிலிருந்து பார்த்தால், என் மக்களுக்காக இவர்களை எதிர்க்கும் நான் ஹீரோ. அவர்களது இடத்திலிருந்து பார்த்தால் நான் வில்லன். இதேமாதிரிதான் சுதன்ஷுவும். இந்தப்பொருளை எடுத்துக்கொண்டுபோய் சேர்க்கவேண்டிய அவருக்கான காரணம் இருக்கும். அதை செய்யவிடாமல் இருக்க எனக்கொரு காரணம் இருக்கும். அதேபோல கௌதமுக்கும். ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் இருக்கும் இயல்பு தான் இது. இந்த இயல்பை கதைக்கு ஏற்ப உருவாக்கியிருக்கும் கலாபிரபு பாராட்டப்படவேண்டியவர். அவரைப் பற்றி நான் சொல்வதைவிட சுதன்ஷு சொன்னால் நன்றாக இருக்கும்.

ராஜ்வீர் சொல்றது உண்மை தான். ஷூட்டிங் ஸ்பாட்ல எங்களுக்கு கிடைச்ச உதவிகள் தான் எங்களுடைய முழு திறமையையும் வெளிக்காட்ட உதவியது. டிரெய்லர்ல வர்ற சேஸிங் சீன் எல்லாம் ஹைதராபாத்ல எடுத்தோம். ஃபெப்சி விஜயன் சார் பண்ணிருக்க ஆக்‌ஷன் சீகுவென்ஸ் எல்லாம் அசாதாரணமானது. இந்திய சினிமாவிலேயே முக்கிய படமா இருக்கும்னு சொல்லலாம்.

தனது அறிவை மட்டுமே பயன்படுத்தி மற்றவர்களை இயக்கும் சக்தியாக சுதன்ஷுவும், தனது அறிவை மற்றவர்கள் பயன்படுத்திவிடாமலிருக்கப் போராடுபவராக சச்சின் கெடேகரும், என் இனம் மற்றவர்களால் ஏமாற்றப்படாமலிருக்க போராடுபவனாக நானும் இந்திரஜித்தில் நடித்திருக்கிறோம். இவர்களிடமிருந்து தன்னையும், அந்த வரலாற்று சிறப்புமிக்க பொருளையும் காப்பாற்றிக்கொள்ள எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் கேரக்டரில் கௌதம் நடித்திருக்கிறார்.

திறமையான மூன்று வில்லன்களிடமிருந்து அந்தப்பொருள் காப்பாற்றப்படுவது எப்படி? அவர்களது வில்லத்தனத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் அந்த நல்லது என்ன? என்பதெல்லாம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் இந்திரஜித் திரைப்படத்தில் எங்களுடன் சேர்ந்து பார்க்கலாம்.

விளம்பர பகுதி

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon