மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

தமிழகம் முதலிடம்: அதிகாரி விளக்கம்!

தமிழகம் முதலிடம்: அதிகாரி விளக்கம்!

டெங்கு பாதிப்பில் தமிழகம் முதலிடத்தை வகிக்கிறது. நாட்டிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெங்கு பாதிப்பில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.

கடந்த 3 மாதத்தில் மட்டும் தமிழகத்தில் டெங்குவால் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வரை நாட்டிலேயே டெங்கு பாதிப்பில் முதல் இடத்தில் இருந்த கேரளா தற்போது இரண்டாவது இடத்துக்குச் சென்றுள்ளது. அதே நேரத்தில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டில் இல்லாத வகையில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 329 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 20 ஆயிரம் பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் உள்ள கேரளாவில் 19 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 15 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டு, 5 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

டெங்கு பாதிப்பு குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி கூறும்போது, “தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் ஆண்டில் 2, 3 மாதங்கள் மட்டுமே இருக்கும். ஆனால், தற்போது ஆண்டு முழுவதும் டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் இருக்கின்றன. அதனால்தான் தமிழகத்தில் ஆண்டு முழுவதும் டெங்கு பாதிப்பு காணப்படுகிறது. கொசுக்களை ஒழிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் டெங்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்” என்றார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் டெங்கு பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நீர் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் என்னும் தேசிய அளவிலான ஆய்வுகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து டெங்கு பாதிப்பில் தமிழகம் முதலிடத்திலேயே உள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon