மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

இரட்டை இலைக்கு லஞ்சம்: சுகேஷ் கூட்டாளி கைது!

இரட்டை இலைக்கு லஞ்சம்: சுகேஷ் கூட்டாளி கைது!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷின் கூட்டாளி புல்கித் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. யாருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைதானார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிற நிலையில், சுகேஷின் கூட்டாளியான புல்கித் குந்த்ராவை டெல்லி போலீசார் இன்று (நவ.22) கைது செய்துள்ளனர். சுகேஷ் சிறையில் இருந்தபோது அவருக்கு விலையுயர்ந்த கார்களை புல்கித் தான் வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon