மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

ஸ்டாலின் குடும்பமும் சேகர் ரெட்டியும்!

ஸ்டாலின் குடும்பமும்  சேகர் ரெட்டியும்!

“நான் எந்த அணியிலும் இல்லை, கல்வி சேவையில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றேன்” என்று சென்னையில் இன்று (நவ.22 ) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ திமுக செயல்தலைவர் ஸ்டாலின் என்னை பற்றி பொய்யான அவதூறுகளைத் தெரிவித்து வருகிறார். எனது வீட்டில் ரெய்டு நடந்ததாக அவர் கூறுகிறார். ஆனால், அப்படி எந்த ரெய்டும் நடைபெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். 53 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் அறம் சார்ந்தே வாழ்ந்து வருகிறேன். என்னுடைய மக்கள் பணியில் ஒன்றாவது ஸ்டாலினிடம் உண்டா? என்று கேள்வி எழுப்பினார்.

சேகர் ரெட்டிக்கும் ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் பணத் தொடர்பு உண்டா இல்லையா? சேகர் ரெட்டிக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு தொடர்பு உண்டா இல்லையா? என்பதற்கு ஸ்டாலின் பதில் கூறவேண்டும் என்று பேசிய அவர்,ரூ. 22 கோடி மதிப்புள்ள ஹம்மர் கார் வாங்கிய விவகாரத்தில் ஸ்டாலின் மகன் வீட்டில் நடத்திய சோதனை என்னவாயிற்று என்பதையும் விளக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தன் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால், அனைத்துப் பணிகளில் இருந்தும் விலகிவிடுவதாகத் தெரிவித்த துரைசாமி, ”ஸ்டாலின் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவர் என்ன செய்வார். ஸ்டாலினை ஒற்றை ஆளாக எதிர்கொள்வேன். தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு அவருக்கு என்ன தகுதி உள்ளது எனவும் விமர்சித்தார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon