மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

நிலக்கரி இறக்குமதி மும்மடங்கு உயர்வு!

நிலக்கரி இறக்குமதி மும்மடங்கு உயர்வு!

வட அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்று மடங்கு உயர்ந்து 21 லட்சம் டன்னாக உள்ளது. இது 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதிகபட்ச நிலக்கரி அளவாகும்.

பெட்ரோலியம் கோக் எனப்படும் எரிபொருள் அதிக எரிசக்தியைக் கொண்டிருந்தாலும் அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே அதைப் பயன்படுத்துவதற்கும் இறக்குமதி செய்வதற்கும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. எனவே மாற்றுத் தேவைக்காக நிலக்கரியை அதிகளவில் இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் மாதங்களில் நிலக்கரியை அதிகளவில் இறக்குமதி செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 21 லட்சம் டன் அளவிலான நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நவம்பர் மாதத்தில் 1ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 15 லட்சம் டன் அளவிலான நிலக்கரியானது கனடா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலியம் கோக் எரிபொருளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதியை எதிர்பார்த்துள்ளன என்று இந்த ஆய்வை மேற்கொண்ட தாம்சன் ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon