மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

வீடியோ உண்மைதான் : தடயவியல் துறை!

வீடியோ உண்மைதான் : தடயவியல் துறை!

2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வீடியோவில் இருப்பது நித்தியானந்தா தான் என்று டெல்லி தடயவியல் துறை இன்று (நவம்பர் 22) உறுதி செய்துள்ளது.

2010 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நித்தியானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா சேர்ந்திருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த வீடியோ காட்சி போலி என்றும் நவீன தொழில் நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்டது என்றும் நித்தியானந்தா தியான பீட நிர்வாகி, சென்னை காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரையடுத்து இவ்விவகாரத்தில் தொடர்புள்ள சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. மேலும் இதுதொடர்பான விசாரணை சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.

இந்த வீடியோவின் உண்மை தரம் குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் உள்ள மத்திய தடயவியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த ஏழு ஆண்டுகளாக விசாரணை நடந்து வழக்கு இறுதிக்கட்டத்துக்கு நெருங்கிய நிலையில், புதிய திருப்பமாக, 2010 ஆம் ஆண்டு வெளிவந்த வீடியோவில் இருப்பது நித்தியானந்தா தான் என டெல்லி தடயவியல் துறை உறுதி செய்துள்ளது. நித்தியானந்தா தரப்பில் கூறுவது போல அந்த வீடியோ காட்சியில் புனைதல் மற்றும் கோர்த்தல் காட்சிகள் எதுவும் இல்லை என்று தடயவியல் ஆய்வக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து லெனின் கருப்பன், “நித்தியானந்தா வீடியோ காட்சி உண்மை என்று ஆதாரமாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வரவுள்ளது. வீடியோ சித்தரிக்கப்பட்டது அல்ல என்பது நிரூபணமானது வழக்கிற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது “என்று கூறினார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon