மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

தரமில்லாத உணவு: ரயில் நிலைய உணவகத்துக்கு சீல்!

தரமில்லாத உணவு: ரயில் நிலைய உணவகத்துக்கு சீல்!

விழுப்புரம் ரயில் நிலைய உணவகத்தில் தரமில்லாத உணவு விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நான்காவது நடைமேடையில் வி.ஆர்.ஆர். என்ற சைவ உணவகம் ஒன்று உள்ளது. முகமது அக்பர் என்பவர் ஒப்பந்தம் எடுத்து ஐ.ஆர்.சி.டி.சி.யின் கீழ் நடத்திவருகிறார். இந்த உணவகத்தில் தயார் செய்து விற்பனை செய்யப்படும் உணவு தரமானதாக இல்லை என்று திருச்சி கோட்ட ரயில்வே வணிகப் பிரிவு அதிகாரிகளுக்குப் பலமுறை புகார்கள் சென்றுள்ளன. அந்தப் புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் அண்மையில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அங்கு தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் தரமில்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவகத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’வைத்தனர்.

இது குறித்து திருச்சி கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மனசரஞ்சன் கூறும்போது, “இந்த உணவகத்தில் தரமில்லாத உணவு வகைகள் தயார் செய்து விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே இந்த உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்று பல்வேறு புகார்கள் வந்ததால் உணவகம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon