மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

மிக்சர் வாங்கி கொடுத்தது யாரு :அப்டேட்குமாரு

மிக்சர் வாங்கி கொடுத்தது யாரு :அப்டேட்குமாரு

கந்துவட்டி கொடுமையால அன்னாடங் காட்சியில இருந்து மாடிவீட்டு கட்டுன மகராசங்க வரைக்கும் கொத்து கொத்தா சாவுறாங்க. எதை பத்தியும் கவலைப் படாம கோட்டைக்குள்ள உட்கார்ந்துகிட்டு ஒருத்தரு மிக்சர் சாப்டுக்கிட்டு இருக்கார். அரசியல்வாதிங்க செல்வாக்கு இருக்குறதால தான் இவ்வளோ கொடுமையையும் அசால்டா பண்ணிருக்காப்டின்னு நெட்டிசன்ஸ் டிவிட் தட்டிகிட்டு இருக்காங்க. அப்ப அந்த மிக்சர் வாங்கி கொடுத்தது யாருன்னு பார்த்தா விஷயம் வெளிச்சத்துக்கு வந்துரும். ஆமா, ஊழல் அதிகமாயிருச்சுன்னு கட்சி ஆரம்பிக்க வந்தவங்க, சிஸ்டம் கெட்டு போச்சுன்னு பில்டப் கொடுத்தவங்க எல்லாம் இந்த நாத்தத்துக்குள்ள இருந்துட்டு தான் அந்த பேச்சு பேசுனாங்களா? முதல்ல உங்க வீட்டுல உள்ள குப்பையை அள்ளுங்கப்பா.

@Anbe Selva

விஷாலுக்கு அன்பு செழியன் பேரை சொல்லக்கூட தைரியம் இல்லை, எல்லாரும் ops eps-சை தான் ஈஸியா அடிச்சுபுடுறீங்க.

@senthilcp

ஜெயலலிதா கைரேகையில் குளறுபடிகள்: மருத்துவர் சரவணன் குற்றச்சாட்டு #ஜெ ன்னாலே ஆரம்பத்துல இருந்தே குளறுபடிதான்

@Kadharb32402180

ஆசிரியர் : ஒரு தட்டுல பத்து லட்டு இருக்கு. அதுல அஞ்சு லட்டுவ ஒன் தம்பிய எடுத்துக்க சொல்றேன்தட்டுல மீதி எவ்வளவு லட்டு இருக்கும்?

மாணவன்: ஒண்ணுமே இருக்காது..

ஆசிரியர் : மக்கு, ஒனக்கு கணக்கே தெரியல...

மாணவன்: உங்களுக்குத்தான் என் தம்பிய பத்தி தெரியல..

@senthilcp

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் மத பிரச்னையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்: ஹெச்.ராஜா #முதல்ல உங்க முதுகை கண்ணாடியில் பார்க்கவும்

@devil_girlpriya

மோடி..

நாடு இப்படியே போனால்..

அம்மா தாயே

இதுதான் இந்தியாவின்

தேசிய கீதமாக மாறும்..

@ItzSweetHeart

ஓபிஎஸ் கலந்துகொண்ட விழாவுக்கான செலவை ஈடுகட்ட மாணவர்களிடம் தலா 150 ரூபாய் வசூலித்த பள்ளி-செய்தி

ஒரு அரை கிலோ மிக்சர் மட்டும் வாங்கி கொடுத்திருந்தா செலவே இல்லாம போயிருக்கும்

@Akku_Twitz

தம்பிதுரையின் உடல் இருப்பது முதலமைச்சர் அணி என்றாலும் இதயம் இருப்பது டிடிவி அணியில் தான்- ஹெச்.ராஜா

இன்னுமும் சின்னபுள்ளபோல கல்லா மண்ணா விளையாட்டு விளையாடிட்டு இருக்காரு

@Kozhiyaar

பெண்களின் அழகு சாதனப் பெட்டியில் புதிதாய் சேர்ந்துக் கொண்ட பொருள் செல்ஃபி கேமரா!!!

@செந்தில்குமார்‏

தேர்தல்ஆணையத்தில் கொடுக்கப்பட்ட J கையெழுத்தில் உயிரோடு இருப்பவர்களின் கைரேகையில் உள்ள ரிட்ஜட்ஸ் இல்லை

கட்சியே உயிர்ப்பு இல்லாமதான் இரு்க்கு

@manipmp

நாம் அறிய வேண்டிய அவசியமான

செய்திகளாயின் அவை நம்மை

நாடி வரும்

-ஜெயகாந்தன்

@vishnut87

அந்த தாஜ் மகால் முன்பு தரையில் உருண்டு , புல் வெளியில் புரண்டு, முட்டிக்கால் போட்டு, முழங்கால் மடக்கி மனைவியை வளைத்து வளைத்து போட்டோ பிடிக்கும் அந்த கணவனின் சிரத்தையை ஒப்பிடும் பொழுது அந்த தாஜ் மகாலை கட்டிய ஷாஜகானின் காதல் சிரத்தை கொஞ்சம் அடிப்பட்டு தான் போகிறது .

@Kannan_Twitz

எண்ணிக்கைகளில் அல்ல,

உன் எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை.

@HAJAMYDEENNKS

EMI என்ற வலையில் எளிதாக சிக்கும் சிறு மீன்கள்

நடுத்தர வர்க்கத்தினர்...!

@Don Vetrio Selvini

Kids : தெர்மோகோல் மூலம் நீரை சேமிக்கலாம்.

men : ஆண் மயிலின் கண்ணீரைக் குடித்து பெண் மயில் கர்ப்பம் ஆகிறது.

Legends : சூரியனுக்கு பல் இல்லை, அதனால் மெது வடை படைக்கப்படுகிறது.

Anbe Selva

ஆண்டவரே திரைத்துறையிலேயே ஊழலாம், யாரோ அன்புவாம், கந்து வட்டியாம் கட்ட பஞ்சாயதாம் ஒரு ட்வீட் போடுறது..

@வாசுகி பாஸ்கர்

கூவம் ஆக்கிரமிப்பை அகற்றினால் அப்போல்லோ ஆஸ்பத்திரியே இருக்காதாமே!

அதெப்படி இடிப்பாங்க, ரெட்டி பணம் கெட்டி ல!

Pon Mathivanan

இனி

கள்ளிக் காட்டிலிருந்து கோத்ரா ரயில் வரை

கவிதை களம் ஆரம்பம் ....

@Prabakar Kappikulam

கந்துவட்டி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

யாரு சொன்னா..?

ஓ.பன்னீர்செல்வமே சொல்லிட்டாராம்….

அப்போ சரி..

@வாசுகி பாஸ்கர்

சினிமா காரங்க luxury யா வாழுறவங்க என்பதை விட, ஏதொருவோரு வெற்றியில் ஒரு காலத்தில் நல்லா இருக்க போய் அதை தக்க வைக்க அரும்பாடு படுபவர்கள் தான்.

எல்லாரும் நாம நினைக்கிற மாதிரி சுகபோகமா கழிக்கிறவங்க இல்லை, நாற்பது தாண்டி வேற தொழில் தெரியாம அதுலையே நீச்சல் அடிக்கிறவங்க.

திருட்டு சிடியில் படம் பாக்குறதை பெருமையாவோ, திருட்டு தனமா டோரண்ட்ல படம் ஏத்திட்டு, அதுக்கு நெக்கலாவும் போஸ்ட் போடுற தமிழ் ராக்கர்ஸ் மாதிரியான ஆட்களை ஹீரோவாவும் கொண்டாடுறதை நிறுத்துங்க!

சத்தியமாவே சினிமா செத்துட்டு தான் இருக்கு!

-லாக் ஆஃப்

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon