மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

திருந்தி வாழ நினைக்கும் தீவிரவாதிகளுக்காக!

திருந்தி வாழ நினைக்கும் தீவிரவாதிகளுக்காக!

ஜம்மு காஷ்மீரில் திருந்தி வாழ நினைக்கும் தீவிரவாதிகள் சரணடைவதற்காகத் தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்துவருவதாகக் கூறப்படுகிறது.இதைத் தடுப்பதற்காகப் பாதுகாப்புப் படையினர் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் தீவிரவாதிகள் சரணடைவதற்காக 1441 என்ற தொலைபேசி எண்ணை சிஆர்பிஎப் அறிமுகம் செய்துள்ளது.

தீவிரவாதத்திலிருந்து வெளியே வர நினைப்பவர்கள் மட்டுமின்றி தீவிரவாத இயக்கத்துக்குள் சேர முற்படும் தங்களது குடும்பத்தினர் குறித்துத் தெரியவரும் உறவினர்கள் இந்த எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் அளிக்கலாம். இது 24 மணி நேரமும் இயங்கிவருகிறது.

இந்த மையத்துக்கு இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேலாக அழைப்புகள் வந்துள்ளன என்றும், இது பயனுள்ளதாக இருக்கிறது என்றும் மத்தியத் துணை ராணுவப் படை ஐ.ஜி. துல்பிகார் ஹஸன் தெரிவித்துள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பாவில் சேர்ந்த காஷ்மீர் கால்பந்து வீரர் மஜீத் கான், தனது தாய் கண்ணீர் விடும் வீடியோவை இணையத்தில் பார்த்த பிறகு இந்த உதவி மையம் மூலம் வீடு திரும்பியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon