மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

`கயல்’ ஆனந்தி ரசிகனுக்கு கிடைத்த பாராட்டு!

`கயல்’ ஆனந்தி ரசிகனுக்கு கிடைத்த பாராட்டு!

ஆனந்தியின் கால்களை ரசித்தபடியே மெட்டமைத்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் இஷான் தேவ் தெரிவித்துள்ளார்.

`என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்துக்காக இசையமைப்பாளர் இஷான் தேவ் மெட்டமைத்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. நவம்பர் 17 ஆம் தேதி படம் வெளியான பிறகும் பாடல்களுக்கு நல்ல விமர்சனமும் வரவேற்பும் கிடைத்து வருகின்றன. படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் பாடல்களைக் கேட்ட இயக்குநர் கௌதம் மேனன் தனது `ஒன்றாக இசை’ நிறுவனத்தின் சார்பாக பாடல் உரிமத்தை வாங்கி சமூக வலைதளங்களில் அதை வெளியிட்டார். ‘இரவில் வருகிற திருடன் போலவே’ என்கிற பாடல் பலராலும் ரசிக்கப்பட்டதோடு, பகிரப்பட்டது.

இந்நிலையில் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து தெரிவித்துள்ள இஷான் தேவ், “`கயல்’ ஆனந்தியின் கால்களைச் சுற்றித்தான் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் கதை, காதல் எல்லாம். படத்தின் முதல் போஸ்டராக டைரக்டர் ஜெகன் காட்டியது அழகான செருப்புகள் அணிந்த ஆனந்தியின் கால்களைத்தான். கதாநாயகியின் முகம் தெரியாமல் அந்த போஸ்டரில் இருந்த கால்களை ரசித்துத்தான் பாடல்களுக்கு மெட்டமைத்தேன்” என்று கூறியுள்ளார்.

“விஜய ஸாகர் வரிகளில் படம் வெளியாகும் முன்பே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது படம் வெளியான பின்பும் இன்னும் பலர் பாடல்களுக்காக தனியாக பாராட்டுகிறார்கள். இதில் வரும் பாடல்கள் முழுவதும் 3 நோட்ஸில் (ச ரி பா) இசையமைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து சாரல், திருப்பதிலட்டு, மிக மிக அவசரம், பட்டினப்பாக்கம், கத்திரிக்கா வெண்டக்கா உள்பட பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon