மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

பவர் பேங்க்: புதிய ஆலை அமைக்கும் க்ஷியோமி!

பவர் பேங்க்: புதிய ஆலை அமைக்கும் க்ஷியோமி!

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள க்ஷியோமி, ஹை-பாட் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, 'பவர் பேங்க்' தயாரிப்பு ஆலையை இந்தியாவில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவின் க்ஷியோமி நிறுவனம், பவர் பேங்க் தயாரிப்பு ஆலையை டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டா நகரில் விரைவில் அமைக்கவுள்ளது. இதுகுறித்து க்ஷியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனு ஜெயின் கூறுகையில், "இங்கு, 10,000 mAh திறனுடைய பவர் பேங்க் மற்றும் 20,000 mAh திறன் கொண்ட பவர் பேங்க் ஆகிய இரு வகைகளும் தயாரிக்கப்படவுள்ளன. 2.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்தப் புதிய ஆலை மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். ஸ்மார்ட்போன் உற்பத்திக்காக க்ஷியோமி ஏற்கெனவே ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு இடங்களில் ஆலைகளை அமைத்துள்ளது. இந்த ஆலைகளின் மூலம் 5,000 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதில், 90 சதவிகிதம் பேர் பெண்கள்.

இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டால், குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவிலான வளர்ச்சியை எட்டியுள்ளோம். உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களின் உதவியுடன் தரமான தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்களை வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் வழங்குவதே எங்களது நோக்கமாகும். இந்தியாவில் பவர் பேங்க் சந்தையைப் பொறுத்தவரையில் அதற்கான தேவை மிக அதிகமாகவே உள்ளது. 10,000 mAh பவர் பேங்கின் விலை ரூ.799ஆகவும், 20,000mAh பவர் பேங்கின் விலை ரூ.1,499ஆகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon