மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

ஜெ.நினைவு நாள்: தினகரன் மவுன ஊர்வலம்!

ஜெ.நினைவு நாள்:  தினகரன் மவுன ஊர்வலம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளன்று சென்னை அண்ணா சாலையில் மவுன ஊர்வலம் சென்று, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் நிறைவடையவுள்ளதை முன்னிட்டு அதிமுகவின் இரு அணிகளும் நினைவு நாள் நிகழ்வுக்குத் தயாராகிவருகின்றன.

இது தொடர்பாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இன்று (நவம்பர் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவின் முதலாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது தலைமையில் சென்னை அண்ணா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை மவுன ஊர்வலம் சென்று மெரினாவிலுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மவுன ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கக் கோரி தினகரன் தரப்பிலிருந்து வி.பி.கலைராஜன் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அன்றைய தினத்தில் இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அதிக அளவில் கூடுவார்கள் என்பதால், அணியினரிடையே மோதல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அன்று மெரினாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon