மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

போராட்டம் : விவசாயிகள் மீது வழக்குப்பதிவு!

போராட்டம் : விவசாயிகள் மீது வழக்குப்பதிவு!

மேலூரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 1250 விவசாயிகள் மீது இன்று (நவம்பர் 22) வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விவசாயத்துக்காக மேலூர் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரிக் நவம்பர் 20 ஆம் தேதி சென்னை - கன்னியாகுமரி சாலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர் மேலூர், நாவினிப்பட்டி, கிடாரிபட்டி, திருவாதவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நான்கு வழிச்சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ஆறு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து வைகை அணையிலிருந்து ஏழு நாட்களுக்குக் கூடுதலாக 900 கன அடி தண்ணீரும், திருமங்கலம் பிரதான கால்வாயின் வாயிலாக 200 கன அடி தண்ணீரும், பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கன அடி தண்ணீரும் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் கள்ளந்திரி கால்வாயில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆட்சியர் வீரராகவ ராவ், தலைமையில் விவசாயத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து விவசாயம் செய்ய தயாராக இருந்து நிலையில் 1250 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி மேலூர், நாவினிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் விஏஓக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் மேலூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 1250 விவசாயிகள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தங்கள் உரிமைக்காகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon