மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

வேலூருக்கு விமானப் போக்குவரத்து!

வேலூருக்கு விமானப் போக்குவரத்து!

நாடு முழுவதும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தைப் பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழகத்தில் விமானச் சேவை இதுவரை வழங்கப்படாத சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விரைவில் விமானச் சேவை தொடங்கப்பட இருக்கிறது.

அதன்படி, வேலூரில் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள விமான நிலையத்தைச் சீரமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. விமான நிலையப் பணிகளைத் தென்மண்டல விமானப் போக்குவரத்து ஆணையர் கடந்த 17ஆம் தேதி ஆய்வுசெய்தார். அந்த ஆய்வின்போது விமான நிலைய இயக்குநர் மாயப்பன் சுவாமியிடமும் அவர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், ''2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வேலூரில் விமானப் போக்குவரத்து தொடங்கும்'' என்றார்.

இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று (நவம்பர் 22) ஆய்வுசெய்தார். அப்போது, விமான நிலையத்துக்குச் செல்லும் பொய்கை - மோட்டூர் மற்றும் சத்தியமங்கலம் - மோட்டூர் ஆகிய சாலைகளை ஆட்சியர் ராமன் ஆய்வுசெய்தார். 2 கி.மீ. நீளம்கொண்ட சாலைகளைப் பார்வையிட்ட அவர், அந்தச் சாலைகளை 6 அடி அகலத்துக்கு விரிவாக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விமான நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டதாகவும் ஆட்சியர் ராமன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது டி.ஆர்.ஓ. செங்கோட்டையன், நெடுஞ்சாலைத் துறை துணை இயக்குநர் அண்ணாமலை, ஆர்.டி.ஓ.செல்வராஜ், தாசில்தார் பாலாஜி மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon