மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

திருமணத்துக்குத் தயாரான நமீதா

திருமணத்துக்குத் தயாரான நமீதா

திருமணச் செய்தி அறிவிப்பைத் தொடர்ந்து திருமணத்திற்காகத் தயாராகிவருகிறார் நடிகை நமீதா. அதன் முதல் கட்டமாக மெகந்தி நிகழ்ச்சி இன்று (நவம்பர் 22) அவருக்கு நடைபெற்றது.

மச்சான் என்ற மந்திர வார்த்தையால் தமிழ் மக்களின் உள்ளம் தொட்ட நமீதா, ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். பல படங்களில் நாயகியாகவும் முக்கிய கேரக்டரிலும் நடித்துவரும் நமீதாவை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். சமீபத்தில் பிக் பாஸில் போட்டியாளராகப் பங்கேற்றதால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது.

இந்நிலையில் பிக் பாஸில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான ரைசா, நமீதாவின் திருமணம் குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் நமீதா தனது நீண்டநாள் காதலரான வீரா என்பவரைத் திருமணம் செய்யவுள்ளதாக ரைசா அறிவித்திருந்தார். அதனையடுத்து தனது வருங்கால கணவரான வீராவை நமீதா அறிமுகம் செய்துவைத்ததோடு, நவம்பர் 24ஆம் தேதி தனக்குத் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது திருமண பந்தத்திற்குள் நுழைய ஆயத்தமாகிவிட்ட நமீதாவிற்கு மெகந்தி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon