மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

டிசம்பர் 15இல் குளிர்காலக் கூட்டத் தொடர்?

டிசம்பர் 15இல் குளிர்காலக் கூட்டத் தொடர்?

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி டிசம்பர் மத்தியில் நிறைவு பெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான குளிர்காலக் கூட்டத் தொடர் இன்னும் தொடங்கப்படாத நிலையில், குஜராத் தேர்தல் காரணமாக மத்திய அரசு அதனை தள்ளி வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் இது தொடர்பாக மத்திய அரசை விமர்சித்திருந்தார்.

இதற்கிடையே, காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் வருவதாலேயே கூட்டத் தொடர் தள்ளிப்போடப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், குளிர்காலக் கூட்டத் தொடரை டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5ஆம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பரிந்துரை ஜனாதிபதிக்கு அனுப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின் முறையான அறிவிப்பு வெளியாகக்கூடும்.

இதற்கிடையே, செய்தியாளர்களை இன்று சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “குளிர்காலக் கூட்டத் தொடர் வழக்கம்போல் நடைபெறும். எனினும், தேர்தலும் கூட்டத் தொடரும் நடக்கும் தேதிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத வகையில் இருக்க வேண்டும் என அரசு நினைக்கிறது” என்று விளக்கமளித்தார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon