மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

ரேஷன் கடைகளில் அரிசி வழங்குவதில் மாற்றம்!

ரேஷன் கடைகளில் அரிசி வழங்குவதில் மாற்றம்!

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகத்தில் மாற்றம் செய்து, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளில் இலவசமாகப் பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகிக்கப்படுகிறது. அதேபோல், சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், குடும்ப அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி 10 கிலோவும் புழுங்கலரிசி 10 கிலோவும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரேஷன் கார்டுக்கு 70 சதவீதம் புழுங்கல் அரிசியும், 30 சதவீதம் பச்சரிசியும் விநியோகிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கிடங்கு பொறுப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “மத்திய அரசின் உணவுக் கிடங்கில் இருந்து 70%புழுங்கல் அரிசி, 30% பச்சரிசி என்ற வகையிலேயே பங்கிட்டு தருகிறார்கள். எனவே அதே விகிதத்தில் பச்சரிசி, புழுங்கல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும். இதனை மீறினால் கிடங்கு பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 14 கிலோ புழுங்கல் அரிசியும், 6 கிலோ பச்சரிசியும் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷனில் 13 ரூபாய் 50 காசு விலையில் வழங்கப்பட்டு வந்த சர்க்கரை விலையை 25 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியது. நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைக் கண்டித்து இன்று (நவம்பர் 22) தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு திமுக போராட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து உளுத்தம் பருப்பு கொள்முதலை அரசு நிறுத்திவிட்டதாக உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். தற்போது அரிசியிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon