மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

இறுதிக் கட்டத்தில் பவன் கல்யாண் 25!

இறுதிக் கட்டத்தில் பவன் கல்யாண் 25!

தெலுங்குத் திரையுலகில் கிஷோர் குமாரின் ‘கட்டமராயுடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பவன் கல்யாண் நடித்துவரும் படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கிவருகிறார். இது பவன் கல்யாணின் 25ஆவது படமாகும். இதன் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

ஏற்கெனவே, பவன், த்ரிவிக்ரம் கூட்டணியில் வெளியான ஜல்சா, அட்டாரிண்டிகி தாரேடி ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். வெங்கடேஷ் சிறப்புத் தோற்றத்திலும், குஷ்பு முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துவரும் இதற்கு வி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதில் பவன் கல்யாண் ஐ.டி. அனலிஸ்ட்டாக நடித்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இறுதிக் கட்டப் படப்பிடிப்பை வருகிற நவம்பர் 27ஆம் தேதி முதல் காசியில் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் ஆடியோ, டிரெய்லர் வெளியீடு குறித்த தகவல்கள் வெளிவரவுள்ளன. படத்தை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 10ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon