மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்ற வீராங்கனைகள்!

இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்ற வீராங்கனைகள்!

ஹாங் காங்கில் நடைபெற்று வரும் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் நேற்று (நவம்பர் 21) தொடங்கின.

இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் டென் மார்க் வீராங்கனை மெட்டே போல்சென் மோதினர். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 21-19, 23-21 என்ற நேர் செட் கணக்கில் போராடி வென்று 2ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இந்த ஆட்டம் சுமார் 46 நிமிடம் நடந்தது. சாய்னா நேவால் 2ஆவது சுற்றில் சீனா வீராங்கனை சென் யூபெய்யுடன் மோத உள்ளார்.

இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி. சிந்து ஹாங் காங்கின் யட் யே லீயங்குடன் மோதினார். அதில் 21-18, 21-10 என்ற செட்க் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப் பருப்பளி தென்கொரியாவின் டாங்லீ உடன் மோதினர். இதில் காஷ்யப் 21-15, 9-21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதேபோல் மற்றோரு இந்திய வீரரான சுபரத் வர்மாவும் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon