மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடல்!

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடல்!

ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய மாடலின் சோதனை ஓட்டத்தை அந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம் விலை குறைந்த ஹேட்ச்பேக் கார் ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளது. அதற்காக முன்னர் வெளியான சான்ட்ரோ என்ற மாடலை மீண்டும் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனால் சமீபத்தில் சோதனை ஓட்டத்தை மேற்கொண்ட ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன.

சான்ட்ரோவிற்கு மாற்றாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட ஹூண்டாய் இயான் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. எனவே நல்ல வரவேற்பைப் பெற்ற சான்ட்ரோ மாடலை புதிய வடிவில் வெளியிட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய சான்ட்ரோ 2018 ஆட்டோ எக்ஸ்போ அல்லது டெல்லி மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் இந்த மாடல் சோதனை செய்யப்படுகிறது.

சோதனை செய்யப்படும் கார் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில் அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புதிய மாடலின் விலை மற்றும் வசதிகள் இன்னும் வெளியாகாத நிலையில் இதன் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்த வண்ணம் உள்ளது. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ 2018-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படலாம் என்றும் இதன் விலை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஹூண்டாய் மாடல்களை போன்று புதிய சான்ட்ரோவிலும் அதிகப்படியான அம்சங்கள் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon