மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

முதலீட்டை ஈர்க்கும் உணவுத் துறை!

முதலீட்டை ஈர்க்கும் உணவுத் துறை!

வருகிற 2024ஆம் ஆண்டுக்குள் சுமார் 33 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் திறனை இந்திய உணவு பதப்படுத்துதல் துறை பெற்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம் மற்றும் சிகாகோவை மையமாகக் கொண்ட கிராண்ட் தார்ண்டன் நிறுவனமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ‘இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையின் மதிப்பு தற்போது 258 பில்லியன் டாலர்களாக (ரூ.16,72,227 கோடி) உள்ளது. இந்த மதிப்பு 2020ஆம் ஆண்டில் 482 பில்லியன் டாலர்களாக (ரூ.31,24,083 கோடி) உயரும். உணவு பதப்படுத்துதல் துறையில் சமீபமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளால் மேற்கூறிய உயர்வு சாத்தியமான ஒன்றுதான். இத்துறையில், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, உபகரணங்கள் ஆகியவற்றில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் குவிந்துள்ளன.

இதன் மூலம் வருகிற 2024ஆம் ஆண்டுக்குள் இந்திய உணவு பதப்படுத்துதல் துறையில் 33 பில்லியன் டாலர்கள் (ரூ.2,13,650.25 கோடி) அளவிலான முதலீடுகள் குவியும். மேலும், 90 லட்சம் பேருக்கான தினசரி வேலைவாய்ப்புகள் உருவாகும். இத்துறையை சர்வதேசச் சந்தையில் போட்டி மிக்க ஒன்றாக உருவாக்கும் வகையில் சில கொள்கை மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். விநியோகச் சங்கிலியை மேம்படுத்தினால் நாட்டின் வேளாண் துறை மற்றும் வர்த்தகம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வலுப்பெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon