மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் மரணம்!

தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் மரணம்!

தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் ஹபிபுல்லா பாஷா, உடல்நலக் கோளாறு காரணமாக இன்று(நவம்பர் 22) காலை மரணமடைந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஹபிபுல்லா பாஷா, மார்ச் மாதம் 8 ஆம் தேதி 1933 ஆண்டு சென்னையில் பிறந்தார். சர்ச் பார்க் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர், தனது இளங்கலை மற்றும் முதுகலையில், இஸ்லாமியம் சார்ந்த படிப்பைப் படித்து பட்டம் பெற்றவர். பின்னர் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை முடித்தார்.

1967 ஆம் ஆண்டு மத்திய அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், பின் 1974 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.1991ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி தமிழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதாடினார்.

அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருணம் விமர்சையாக நடந்த வழக்கிலும், தமிழக அரசு சார்பில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தார். 1986 ஆம் ஆண்டு , உச்சநீதிமன்ற நீதிபதியாக அவரை நியமித்தபோது , அந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

இந்நிலையில்,84 வயதான மூத்த வழக்கறிஞர் ஹபிபுல்லா பாஷா, உடல்நலக் கோளாறு காரணமாக மரணமடைந்தார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon