மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

சூரியனை ஆராய செயற்கைக்கோளை அனுப்பும் இஸ்ரோ!

சூரியனை ஆராய செயற்கைக்கோளை அனுப்பும்  இஸ்ரோ!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, தன்னுடைய அடுத்த கட்ட ஆராய்ச்சிக்காகச் சூரியனை ஆராய செயற்கைக்கோளை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ உலகையே மிரள வைத்துவருகிறது. குறைந்த செலவில் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிச் சாதித்துவருகிறது. சந்திரன், செவ்வாய், போன்றவற்றிற்கு செயற்கைக் கோள்களை அனுப்பிச் சாதித்த இஸ்ரோ அடுத்த கட்ட ஆராய்ச்சிக்குத் தயாராகிவிட்டது. தற்போது சூரியனை ஆராய செயற்கைக் கோளை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, இஸ்ரோ தலைவர் ஏ.எஸ் கிரண் குமார் கூறுகையில், ஆதித்யா - எல்1 என்ற செயற்கைக்கோளை சூரியனை ஆராய இஸ்ரோ மூலம் முதன் முறையாக அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 2019இல் ஆந்திராவின், ஸ்ரீ ஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்படும்.

இதற்காக 2008இலிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூரியனின் இயக்கவியல் செயல்முறைகள் கொள்கைகளை ஆராய்வதற்காக, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆதித்யா - எல்1 வெற்றி பெற்றால் சர்வதேச அளவில் இந்தியா மாபெரும் சாதனையைப் படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon