மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

முட்டை விலையேற்றம்: ஆம்லெட் விலை உயர்வு!

முட்டை விலையேற்றம்: ஆம்லெட் விலை உயர்வு!

முட்டை விலையேற்றத்தைத் தொடர்ந்து ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆம்லெட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், தமிழ்நாட்டில் மழை வெள்ளம் மற்றும் மாட்டிறைச்சித் தடை காரணமாகவும் முட்டையின் விலை வரலாறு காணாத ஏற்றதைச் சந்தித்தது. முன்னதாக ரூ.5 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை, கடந்த சில நாட்களாக ரூ.6க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தற்போது ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஆம்லெட்களின் விலையும் உயர்ந்துள்ளது. முன்னதாக ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களில், ஆம்லெட் ஒன்று ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது முட்டை விலையேற்றத்தின் காரணமாக ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஹாஃப் பாயில், பிரட் ஆம்லெட் உள்ளிட்டவையும் விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்களிடம் ’லைவ்சென்னை.காம்’ சார்பாகக் கருத்து கேட்டபோது, ஆம்லெட் தயார் செய்வதற்கு முட்டை மற்றும் வெங்காயம் மிக அவசியமாகும்; வெங்காயத்தின் விலையும் சில நாட்களாகக் கிலோவிற்கு ரூ.45 முதல் ரூ.60 வரை கடும் உயர்வைச் சந்தித்தது. இதன் காரணமாகவே ஹோட்டல்களில் ஆம்லெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon