மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

திமுக போராட்டம்: ரேஷன் கடைகள் மூடல்!

திமுக போராட்டம்: ரேஷன் கடைகள் மூடல்!

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாவிலைக் கடைகள் முன்பும் திமுக போராட்டம் செய்துவருவதால், நியாய விலைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்தும், குடிமைப் பொருள்கள் சரியாக வழங்கப்படாதததைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் முன்பும் நவம்பர் 22ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக திமுக அறிவித்திருந்தது (மின்னம்பலம்.காமில் நவம்பர் 20 அன்று மாலை 7.00 மணிப் பபதிப்பில் இது குறித்த செய்தி வெளியிட்டிருந்தோம்).

அதன்படி, இன்று, தமிழகம் முழுவதும், 32 மாவட்டங்களில், 12,534 ஊராட்சி, 385 ஊராட்சி ஒன்றியம், 525 பேரூராட்சி, 125 நகராட்சி, 12 மாநகராட்சிகளில் உள்ள, 35,475 நியாய விலைக் கடைகள் முன்பு திமுக வினருடன் பொதுமக்களும் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நியாய விலைக் கடைகள் மூடப்பட்டன.

நியாய விலைக் கடைகள் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் திமுகவுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. திமுக தொண்டர்களுடன் மக்கள் கூட்டமும் பெருமளவில் சேர்ந்துள்ளதாகக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு கடையின் முன்பும் சராசரியாக 100 பேர் என்னும் நிலையில் 35,475 கடைகள் முன்பு மொத்தம் 35,47,500 (முப்பத்தி ஐந்து லட்சத்து, நாற்பத்து ஏழாயிரத்து ஐநூறு) பேர் கலந்துகொண்டதாகப் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது திமுக தலைமை என்று கழக உடன் பிறப்புகள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon