மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

தனியார் துறையில் குறையும் வேலைவாய்ப்பு!

தனியார் துறையில் குறையும் வேலைவாய்ப்பு!

இந்தியாவில் வருகிற 2018 மார்ச் மாதம் வரையில் ஊழியர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கை மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாகவே ஊதியச் செலவுகளைக் குறைக்கும் வகையில் தனியார் துறை நிறுவனங்கள் குறைந்த அளவிலேயே ஊழியர்களைப் பணியில் சேர்க்கின்றன. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை மந்தமாகவே உள்ளது. தானியங்கிமயம் உள்ளிட்ட சில காரணிகளும் இதில் உள்ளன. இந்நிலையில் கடன் சுமையைக் குறைக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் தனியார் துறையில் ஆள் சேர்ப்பு குறைவாக இருக்கும் என்று லைவ்சென்னை.காம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வாரையில் இந்த நிலை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனினும், அடுத்த நிதியாண்டில் இயல்பு நிலை திரும்பும் என்றும், தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கித் துறையில் இந்த மந்தநிலை பெரும்பாலும் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாராக் கடன் பிரச்னையில் சிக்கித் தவித்து வரும் வங்கித் துறையை மீட்டெடுக்க மத்திய அரசு கடந்த மாதம் ரூ.2.11 லட்சம் கோடி மூலதனத்தை ஒதுக்கீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த நிதியாண்டில் வங்கித் துறையில் வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் பணியமர்த்தும் நடவடிக்கை சிறப்பாக வாய்ப்புள்ள

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon