மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

ஜுங்காவில் நேகா ஷர்மா

ஜுங்காவில் நேகா ஷர்மா

விஜய்சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நேகா ஷர்மா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

`இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குநர் கோகுல் இயக்கும் இந்த படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். பாரிஸில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு முடிந்து நாடு திரும்பியுள்ள படக்குழு டிசம்பர் அல்லது ஜனவரியில் சென்னையில் படப்பிடிப்பை தொடங்க உள்ளது. இதில் இரண்டாவது கதாநாயகியாக `சோலோ’ படத்தில் நடித்திருந்த நேகா ஷர்மா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “படக்குழுவினர் நேகா ஷர்மாவிடம் பேசினர். படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இருப்பினும் கால்ஷீட் இன்னும் முடிவாகவில்லை. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அவருக்கு ஒரு பாடல் காட்சியும் உள்ளது. பாவாடை தாவணி அணிந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.

ஜுங்காவில் விஜய் சேதுபதி தாதாவாக நடிக்க, காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon